துர்கழிவு மொழி

சிறந்த நல்ல வியாபார யுக்தியாய் ஆச்சு
கோயிலில் அர்ச்சகர்கள் செய்யும் சூழ்ச்சி
கால்கடுக்கச் செய்யும் வழிபாட்டு வரிசை ஒன்று
காசு கொடுத்துச்செல்லும் வழிபாட்டு வரிசை ஒன்று
கரைவேட்டிக்கட்டி வந்தால் மூலவரையே முந்தி உள்ளே
துளசி தண்ணீர் விபுதி குங்குமம் சந்தனம் இதற்கு
கூட்டத்தினர் போடும் தொகையோ வரிக்கு உட்பட்டே
ஓடுவதோ உழைப்பதோ தேடுவதோ இவர்களுக்கில்லை
ஓதும் மந்திரமோ பணம் ஈவோருக்கும் புரிவதாய் இல்லை
கொடுப்பவன் இங்கு நீசனாய் பெறுபவன் தேவனாய்
ஏமாறுவதும் ஏமாற்றுவதும் தெரிந்து ஏனோ மக்கள் மூடராய்
உருவில்லா துர்கழிவு மொழியைப் போற்றுபவன்
உலகிற்கு உயிர்க்கொடுத்த ஆதித்தமிழை இகழ்வதோ.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (23-Nov-20, 6:10 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 21

மேலே