நெட்டைக்காலுப் பையன்

நெட்டைக்காலுப் பையன்
■■■■■■■■■■■■■■
ஏன்டா பொன்வண்ணா?
◆◆◆◆◆
என்னங்க பெரிய தாத்தா?
◆◆◆◆◆◆◆◆◆
தொலைக்காட்சி தொடரெல்லாம் பாக்கிறயே என்ன தெரிஞ்சுகிட்ட?
◆◆◆◆◆◆◆◆◆
சினிமா மாதிரி காதல் காட்சிகளக் காட்டறாங்க. சினிமாப் பாட்டுகளைப் பின்னணி இசையாப் போட்டு ஆடறாங்க. வில்லி வீட்டிலேயே இருக்கிறா. சில தொடர்கள்ல ஒரு குடும்பமே வில்லத்தனமா பல கெடுதல்களைச் செய்யுது. நல்லவங்களையும் அப்பாவிகளையும் கொல்லறாங்க. தற்கொலைக்கு எப்பவும் விசப்பாட்டிலைக் கையில வச்சிருக்கிறாங்க.
◆◆◆◆◆●●●
இதெல்லாம் எனக்கும் தெரியும்டா. இதையெல்லாம்விட முக்கியமான ஒண்ணை நீ சொல்லல.
◆◆◆◆◆◆◆◆
என்னங்க பெரிய தாத்தா?
◆◆◆◆◆◆◆◆
புதிய தொலைக்காட்சி தொடர்கள்ல நடிக்கிறவங்களக் கவனிச்சயா?
◆◆◆◆◆◆◆
என்ன சொல்ல வர்றீங்க? ◆◆◆◆◆◆◆●
அட முட்டாப் பயலே. கதாநாயகர்கள் எல்லாம் நெட்டையா ஒயரமா தாடி வச்சிட்டு செவப்பா இருக்கிறாக்க.
நம்ம ஊரிலேயே நீதான்டா ரொம்ப நெட்டையா இருக்கிற. உனக்கு ஊரில பட்டப்பேரே 'நெட்டைக்காலுப் பையன். நீ அழகா இருக்கிற. நீயேன்டா தொலைக்காட்சி தொடர்ல நடிக்கக்கூடாது? போடா சென்னைக்கு.
◆◆◆◆◆●◆◆◆
பெரிய தாத்தா நான் அதைப் பத்தி விசாரிச்சேன். தமிழைத் தாய்மொழியாப் பேசறவங்களுக்கு வாய்ப்பு கெடைக்திறதில்லன்னு சொல்லறாங்க. அதான் பேசாம இருக்கிறேன்.
◆◆◆◆◆◆◆◆◆
ஒ... அப்பிடியா. சரி. சரி.

எழுதியவர் : மலர் (23-Nov-20, 9:11 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 158

மேலே