நன்றி அறிவித்தல்

நன்றி அறிவித்தல்
நண்பர்களும் நல் உறவுகளும் நலம் கேட்டு
நற்சுவை விருந்து படைத்து அதைப் பகிர்ந்து
குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றாக இணைந்து
இவ்வாழ்வை தமக்கு அளித்தமைக்கு நன்றியினை
ஊரறிய தெரிவித்து உல்லாசம் பொங்கும் வகையில்
வான்கோழியினை உணவாக்கி அதை பங்கிட்டு
வகையான பழங்களும் அறுசுவை கிழங்குகளும்
அதோடு சேர்த்து அருமையாக அலங்கரித்து
மகிழ்ச்சியில் நாடெல்லாம் கொண்டாடும் விழா
நன்றி அறிவித்தல் என்ற பெயரில் அமைந்ததுவே!

எழுதியவர் : கே என் ராம் (23-Nov-20, 9:25 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 43

மேலே