அவளும் நானும்

நேற்றுவரை காதல் மயக்கத்தில்
அவள் முன்னே போக போக
அவள் பின்னே நான் .............
இன்று நான் முன்னே போக போக
மெல்ல மெல்ல அவள் என் பின்னே
நான் சொன்னாலும் முன்னே போக மறுத்து
நேற்று காதலர் ......
இன்று தலைவன் நான்
குடும்ப தலைவி அவள்
தானாகவே வந்திடும் தன்னடக்கம்
நம் நாட்டு பெண்டிரின் ரத்தத்தில்
ஊறி இருக்கும் பண்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Nov-20, 6:59 pm)
Tanglish : avalum naanum
பார்வை : 454

மேலே