முழு கவிதையடி நீ எனக்கு 555
*முழு கவிதையடி நீ எனக்கு 555 ***
என்னுயிரே...
மாலைநேர தென்றலும்
மாலை கதிரவன் ஒளியும்....
நம் மேனிக்கு
நல்லது என்கிறார்கள்...
உடலின் பூரிப்புக்கும்
என் உயிரின் தேடலுக்கும்...
பார்வை விருந்தை
பரிமாறி கொள்ளும்...
நம் மாலை சந்திப்புதான்
எனக்கு சுகமடி...
நான் கவிதையென
பல எழுதினாலும்...
எனக்கு புடித்த கவிதை நீ எழுதும்
என் மன்னவனே என்னும் வார்த்தை...
எனக்கு
முழு கவிதையடி...
ரசித்து ரசித்து
படிக்கிறேன் நானும்...
பூக்களின் புன்னகையை
நீ திருடிவிட்டாயாம்...
பூக்களின் ராணி
குறை சொல்லுதடி என்னிடம்...
உன் கன்னசுழிப்பை
எங்கே திருடினாய் நீ...
நித்தம் நித்தம்
கொள்ளுதடி நம் சந்திப்பில்...
நீ போகும்
வழியெங்கும் உன் மணமே...
உன்னை தேடிதேடி
வருவேன் தினம் தினமே...
என் உயிரானவளே.....
*முதல் பூ பெ.மணி .....*

