வண்டானது என் மனம்

சிவந்த அவள் அதரம் அப்போது
உவந்து கதிரவன் கதிருக்கு மகிழ்ந்து
அலர்ந்த தாமரை இதழ்போல காண
அதில் ஊரும் தேனை சுவைத்திட
துடிக்கும் வண்டானது என் மனது
வண்டாய் மாறி அவள் அதரத்தில்
அமர்ந்து சுவைத்து முத்தமிட்டுவர

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Nov-20, 6:33 pm)
பார்வை : 163

மேலே