எழுதும் வரிகள் உன்னை என்பதால்

எழில் வானில் வானவில்
எழுதும் வரிகளிலும் வானவில்
எழுதும் வரிகள் உன்னை என்பதால்
எழில் வானவில் கலைந்து போகலாம்
கலைந்திடும் கூந்தல் காற்றிலாட
கண்களிரண்டும் கனவில் மிதந்திட
மெல்லிய இதழ்களில் புன்னகை விரித்திடும்
உன்னை எழுத எழுத
என்னுள் புதிது புதிதாக வானவில் தோன்றலாம் !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Nov-20, 6:51 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 164

மேலே