நிவரே சென்று விடு

புயலே
பொங்கியது போதும்
பிரளயம் கொள்ளாமல்
பின்நோக்கி சென்று விடு

விண்கொண்ட பாசம் மண்கொண்டாலும்
புதைகுழி ஆகிவிடாதே
பூம்புனலாய் சென்றுவிடு

தவிக்கின்ற பாமரனுக்கும்
வாயில்லா உயிருக்கும்
வாழ இடம் தந்து
வாட்டத்துடன் சென்றுவிடு

உன் ஆர்ப்பாட்டம்
உள்மூச்சு அடங்கி
உணர்வற்று போகிறது
உடனே சென்றுவிடு

எம் மக்கள் சுவாசிக்க
எல்லையை விட்டு
எழில் முகம் காட்டி
ஏற்றம்தர சென்று விடு

தரையோடு
உறவாடியது போதும்
உயிரோடு
உறவாடி விடாதே
கூவலைவிடுத்து சென்றுவிடு

அடிக்கடி ஏன் இப்படி
அல்லல்பட வைக்கிறாய்
அந்நியனைப் போன்று
வந்த தடம் இல்லாமல்
நிவரே சென்றுவிடு

எழுதியவர் : உமாபாரதி (29-Nov-20, 1:19 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 74

மேலே