மருத்துவ வெண்பா – பச்சரிசி அன்னம் - பாடல் 72

நேரிசை வெண்பா

பச்சரிசிச் சோறு பலங்கொடுக்கும்; வாயுவென்பார்
நிச்சயமா கப்பித்தை நீக்குங்காண் – அச்சமற
மூத்திரக்கி ரிச்சரத்தை முன்பொழிக்குஞ் சேய்க்குமந்த
மாத்திரமுண் டாக்கும் வழுத்து!

- மருத்துவ குண விளக்கம்

குணம்:

பச்சரிசி அன்னமானது பலத்தையும், குழந்தைகட்கு மாந்தத்தையும் உண்டாக்கும். பித்த கோபத்தையும், கிரிச்சர ரோகத்தையும் நீக்கும். இதில் வாயு உண்டென்பர்!

உபயோகிக்கும் முறை:

சாதாரணமாகப் பச்சரிசி அன்னத்தால் தேகத்திற்குப் பல நன்மைகள் உண்டு. இத்தகைய அன்னத்தில் நெய் அதிகமாகச் சேராவிடின் சில தேகிகட்கு உஷ்ணவாயு சம்பந்தமான பிணிகள் உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Nov-20, 5:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே