நதி

காட்டில் பிறந்து விலங்கோடு விளையாடி
மலையை கிழித்து கல்லோடு உறவாடி
இனிய இசையோடு பாய்ந்து ஓடி
தன் வழி உள்ளதை பொருட்படுத்தாமல்
மீன்களோடும் இயற்கையோடும் உரையாடியது
அன்று நான் கண்ட நதி

ஒரு நிமிடம் நினைவுக்கு வந்து போனது
என் தோல் மீது அமர்ந்து மகள் அப்பா
இது தான் நதியா என
மணல் லாரிகள் மட்டுமே ஓடிய
நதியை காட்டி கேட்டபோது
அன்றுதான் புரிந்தது நாம்
என்ன தொலைத்தோம் என்று,
அன்று கரைபுரண்டு ஓடியது என் கண்ணில் ஒரு நதி

-இணைய தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 4:24 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : nathi
பார்வை : 122

மேலே