கவிஞரின் குமுறல்

என்னவளின் அழகை கண்டு
சுருக்கி சொன்னேன் பொன்மொழி என்றாள்
சுருங்க சொன்னேன் கவிதை என்றாள்
விளங்க சொன்னேன் பாட்டு என்றாள்
விளக்கி சொன்னேன் காவியம் என்றாள்
இவை அனைத்தும் உன்னை நினைத்து சொன்னேன் என்றேன்
என்காதலனுக்கு ஒரு கவிதை எழுதி கொடு தோழா என்றாள்
- இணைய தமிழன

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 4:59 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : kavignarin kumural
பார்வை : 147

மேலே