ஸ்வாமி சரணம்

சுவாமி சரணம்
அகமுருகி அழைப்போரை அருள்பாலிக்கும்
ஆபத்பாந்தவன் அமரும் மலைக்கு சரணம்
இருமுடி தாங்கி சிற்றின்பங்களை துறந்து
ஈசனும் மாலும் இணைந்து ஈன்ற புதல்வனை
உள்ளத்தில் அன்போடு நினைத்து போற்றி
ஊன் உருக உணர்ந்து தீவிரவிரதம் கொண்டு
எங்கும் நிறை சரண ஒலியுடன் மாலைஅணிந்து
ஏற்றி விடவும் தூக்கி விடவும் அவனை வேண்டி
ஐம்புலனையும் அடக்கி அப்பதினெட்டு படிகளை
ஒருமனதாக தியானித்து மெய்பொருள் இது என
ஓசையின்றி உணரும் உன்னத அவ்வேளையை
நினைத்து சபரி நாதனை சரணம் அடைவோமே

எழுதியவர் : கே என் ராம் (3-Dec-20, 6:27 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 21

மேலே