இயற்கை இரசிகன்

இயற்கை இரசிகன்

காட்டு செடிகள்
கலைந்து கிடக்கின்றன
பச்சை கொடிகள்
பாம்புகள் போல் பின்னி
பிணைந்து கிடக்கிறது
இளஞ்செடி ஒன்று
வெட்கமில்லாமல் தலை
குனிந்து பக்கத்து செடியை
முத்தமிட்டு கொண்டிருக்கிறது
இவைகளின் ஊடே
போட்டியாய் பங்கு
போட்டு கொண்டிருக்கிறது
நீளமான இளம்
பச்சை புற்கள்
அதன் நுனிகளில்
சூரிய ஒளி பட்டு
மின்னிட்ட முத்துக்களாய்
பனித்துளிகள்

வருபவர் போவோர் கண்களுக்கு
புதராய் தெரிந்தாலும்
இரசிப்பவன் கண்களுக்கு
இதுவும் அழகுதான்

எழுதியவர் : dhamotharan.ஸ்ரீ (3-Dec-20, 9:48 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : iyarkai irasigan
பார்வை : 627

மேலே