திரை

திரை முன்னே தெரியும் பலவும் போலிகளே
உன் பின்னால் நடமாடும் யாவும் நிஜங்களே
திருமுகம் கொண்ட நாணயம் போல்
பல முகங்களை ஒளித்து வைத்தாய் உன் இருளில் இன்று
புன்னகை புரியும் பலரும் குமுறும் சத்தம் கேட்டேன்
ஓடி ஆடும் குறும்புகள் எல்லாம் முடமாய் ஒடுங்கி கிடப்பதும் அறிந்தேன்
பழமாய் பழகும் பாம்புகளும் நஞ்சை கக்கியதை கண்டேன்
கூட்டத்தில் இருக்கும் நெஞ்சங்கள் தனிமையில் துடிப்பதையும் உணர்ந்தேன்
எத்தனை உணர்வுகள் உன்னில் மறைய என் முகமூடி அணிந்து ஓடுகிறான் மனிதன்
வஞ்சமும் வாசமும், நிறையும் குறையும், உண்மையும் பொய்மையும்
உனக்கு மட்டுமே வெளிச்சம், சிதறி போகும் கண்ணாடியும்
அதில் தெரிந்த பிம்பமும் பேசிக்கொண்ட மொழி உனக்கு மட்டுமே புரியும்
திரை போட்டு எல்லாம் மறைத்த நாம் இன்றும் நம்மையும் நம் உணர்வுகளையும்
திரையிட்டு கொண்டோம், திரையின் மறைவில் நானும் ஒரு கள்ளனே.

எழுதியவர் : ஹேமாவதி (3-Dec-20, 10:22 am)
சேர்த்தது : hemavathi
Tanglish : thirai
பார்வை : 91

மேலே