ஓர் சொல் சொல் பெண்ணே

உன் -அங்கம் தொட்ட
மழைத்துளிகளை எங்கும்
நகராமல் வங்கு அமைத்திடவா...?

நீ-பாதம் சலவை செய்த
ஓடைநீரை ஓட விடாமல்
அடைப்புப் போட்டு விடவா...?

உமது -பொன்னான
மேனியைப் படம் பிடித்த
மன்னலை வரவழைத்து
கண்களால் கைது செய்திடவா ..?

உனது- கார்காலகக் கூந்தலை
தொட்டுக் கற்பழித்த
வாடைக் காற்றை சாடியினுள்
இட்டு மூடிக் கொள்ளவா ..?

இல்லை -தேவியுமது அழகு
கண்டு தேவலோகப் பக்தன்
பூ மழை தூவி பாதம்
தொட்டதாய் எண்ணி
அனைத்தையும் விட்டு விடவா ..?

சொல் கண்ணே சொல்
செவ்விதழ் திறந்து
செங்கரும்பின்
சுவை போல் ஓர் சொல்
சொல் பெண்ணே சொல்./

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (3-Dec-20, 7:17 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : or soll soll penne
பார்வை : 227

மேலே