ஏமாறாதே

ஏமாறாதே

நேரிசை வெண்பா

வள்ளுவன் நம்தமி ழர்க்கே யுரைத்ததும்
பள்ளிக் குழந்தைகள் பாட மாம் -- தள்ளாதே
வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை யில.




தமிழர்களே வள்ளுவன் சொல்லைக் கேளுங்கள் ஆண்டவனுக்கு வேண்டியவன்
வேண்டாதவன் கிடையாது. உலகில் கடவுள் வேண்டியவன் வேண்டாதவன்
பார்ப்பதில்லை. கொலைபாதகம் பஞ்சமா பாதகம் செய்துவிட்டு ஆண்டவனே என்னை
மன்னியும் என்றால் கடவுள் மன்னிப்பானா ? அரசு தண்டிக்க சட்டம் உள்ளது
என்றாலும் கடவுளின் சட்டம் விடாது. அந்தக் கொலைப் பாவத்திற்காகவே மனிதன்
பலவித வுயர்வுத் தாழ்வாகப் பிறக்கிறான்

நீ கொலை செய்துவிட்டு உடலை வருத்தி கடவுளுக்கு விரதம் இருதாலும் நீக் கொலை
பாதகனே. உன்னை மன்னிக்க உன் வீட்டுக் கதவுமுன் நிற்க மாட்டான். கதவைத் தட்ட
மாட்டான். மனிதன் அறவழியில் நடந்தால் என்ன கெட்ட வழியில் நடந்தால் என்ன
கடவுள் கவனிக்க மாட்டான். அதற்கு எமனே தண்டிப்பான். நல்லார்க்கு இந்திரன்
இடம் ஒதுக்கி கொடுப்பான்.

இதை நான் சொல்லவில்லை வள்ளுவரின் பல குறள் களிலும் உள்ளது. தமிழன்
படிக்க வேண்டியது திருக்குறள். எவன் எந்த புத்தகத்தை கொடுத்தாலும் பார்க்காதே.
படிக்காதே தமிழா ஏமாறாதே.


...

எழுதியவர் : பழனிராஜன் (3-Dec-20, 7:43 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 660

மேலே