வேறுபாடு
வானமொன்றை வரைந்து முடித்திருந்தேன்
என்னில்
இறக்கைகள் முளைத்துகொன்டன
நான் இளைப்பாறும்
மரத்திலமர்ந்து
அலகால் உன் இறகுகளை கோதிக்கொண்டிருந்தாய் நீ
கூண்டுக்குள்ளிருந்து வந்ததாகவும்
வாடகைக்கோர் வானம் தேடுவதாயும்
பறவைகளின் பாஷையில்
பேசிகொண்டாய் என்னிடம்
பறக்கும் காலம்வரை
என் வானத்தில் வட்டமிட உனக்கும் அனுமதியிட்டேன்
எனைச்சுற்றி சிறகடித்தாய்
சில காலங்களின் பின்
புயல்களில் திசைமாறி
சிறகசைத்துக்கொண்டாய் நீ
உன் கூண்டில் நானும்
என் வானத்திற்குள் நீயும்
இப்போதும் பறந்துகொண்டிருக்கிறோம்
இருந்தும் இரண்டிற்கும் வேறுபாடுண்டு
அர்த்தனன்