தெரிந்து கொள்வோம்

🌺 பாலைவனம்🌺

இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் தார் இது ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது

🌺காடுகள்🌺

நம் நாட்டில் காடுகள் ஐந்து விதமாக உள்ளன அவை வெப்ப மழை காடுகள் ,வெப்ப இலையுதிர் காடுகள், ஓதக் காடுகள் , இமாலயத் தாவரம் , வறண்ட காடுகள்

🌺மாங்குரோவ் காடுகள் 🌺

இவற்றை பொதுவாக சதுப்பு நிலக் காடுகள் என்பார்கள் சிலிக்கா ஏரி, விசாகப்பட்டினம் ,
பிச்சாவரம் ஆகிய இடங்களில் உள்ளன

🌺 வனவிலங்குகள் சரணாலயம்🌺

இந்தியாவில் தேசிய பூங்காக்கள் -89 வனவிலங்குகள் சரணாலயம் -500 புலி பாதுகாப்பு பகுதிகள் -27 வன உயிர் காட்சி சாலை சாலைகள் -200 பாதுகாக்கப்பட்ட உயிரி வாழ்விடங்கள் -13 உள்ளன.ரேணுகா , மகாநந்தா ,ஜல்டபரா, சோனா-பூயய் ,ஓரங் , இன்டாகி , ரத்தம் பூர் , பன்னா, ஹசாரி பாக் ,பேதுதகிரி ,பர்மடன்,சனகாலி,சுந்தர்பன், நக்சீரா,மேல் கட்,கிர்,சிலிக்கா,கின்வட்,காவல்,எடுர்நகர்,போச்சரம்,ராதா நகர் ,ஸ்ரீசைலம் ரேனிபென்னூர் ,
முதுமலை, இரவி குளம், பெரியார் வனவிலங்குகள் காப்பகம், முண்டந்துறை

🌺பறவைகள் சரணாலயம்🌺

சுல்தான்பூர் , கியோலடியோ, சந்திரபிரபா, ஜதியா,நல் சரோவர் , ரத்தன் மஹால் மஹால் ,பகிராலயா, கான்ஹெரி,கர்னாலா,சிலிக்கா,கொலேறு,ராதாநகர்,நீலப்பட்டு,புலிகாட்,அதிசுன்சாகிரி,வேடந்தாங்கல்,ரங்கன் திட்டு,காலிமேர் முனை,வேட்டங்குடி

🌺மலைகள்🌺

மலைச் சிகரங்களில் உலகிலேயே மிகவும் உயரமானது எவரெஸ்ட் சிகரம் ஆகும் (உயரம் 8848மீ) இது நேபாள எல்லையில் உள்ளது. இரண்டாவது உயரமான சிகரம் காரகோரம்-2(உயரம் 8611மீ) இது இந்திய எல்லையில் உள்ளது.இதை k2 என்றும் சொல்வார்கள் .
இதன் மற்றொரு பெயர் காட்வின் ஆஸ்டின் இவை தவிர கிழக்குத் தொடர்ச்சி மலைகள், மேற்கு தொடர்ச்சி மலைகள், விந்திய சாத்பூரா மலைத்தொடர்கள் ஆகியவை நம் நாட்டின் முக்கிய மலைத்தொடர்கள் ஆகும்.

🌺நதிகள் 🌺

இந்தியாவின் ஜீவநதி கங்கை இந் நதி இந்தியாவில் பாயும் நதிகளிலேயே நீளமானது, பெரியது. இமயமலையில் உற்பத்தியாகும் பாகீரதியும் `அலகா'விலிருந்து உற்பத்தியாகும் அலகன்னடவும் தேவப்ரயாக் என்ற இடத்தில் இணைந்து கங்கை ஆகிறது இதன் நீளம் 2510 கி.மீது ஆகும்.இதுதவிர சிந்து,பிரம்மபுத்திரா,சபர்மதி,மகி,நர்மதா,தபதி,மஹாநதி,கோதாவரி,
கிருஷ்ணா,காவிரி.

🌺ஏரிகள்🌺

நம் நாட்டின் மிகப்பெரிய ஏரி
ஊலர் ஏரி (காஷ்மீர்)
தால் ஏரி (காஷ்மீர்)
சிலிக்கா ஏரி(ஒரிசா)

🌺விமான தளங்கள்🌺
நம் நாட்டின் மிக முக்கியமான 4 விமான தளங்கள் முறையே டெல்லி மும்பை கொல்கத்தா சென்னை ஆகியவை .

எழுதியவர் : உமாபாரதி (4-Dec-20, 5:36 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : therinthu kolvum
பார்வை : 172

சிறந்த கட்டுரைகள்

மேலே