உச்ச மகிழ்ச்சியில்

ஈயைப் போல் மேனி மேல் படர்ந்து
இனிமையான சுகங்கொணர்ந்து
ஈருடல் இயைந்து முடிவில் புணர்ந்து
யோனிப்பையை விந்தால் நிறைத்து
உச்ச மகிழ்ச்சியில் இருவரும் மகிழ்ந்து
முதல் முயற்சியிலே பெண்ணவள் வென்று
பிள்ளையாய் கருதங்கி உவகைத்தந்தால்
புணர்ந்தவன் முகநூல் நண்பனென
புரிந்துக்கொள்ளும் முன்னே புயலானான் என
புழுவாய்த் துடித்து புலம்பி அழுது
நெடுந்தவறை நொடியில் செய்து
கருகலைத்து ஆற்றாமையில் தவித்து
கல்லறை போகும் வரையில் அதனால்
நித்திரை தொலைத்து பெருவாழ்வில்
நுழைந்து வாழ விரும்பும் இளைஞர் கூட்டத்தால்
சிறந்து விளங்கும் நூற்றாண்டு இதுவே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (4-Dec-20, 6:46 pm)
Tanglish : ucha makizhchiyil
பார்வை : 215

மேலே