இன்னமும் இருக்கிறார்

இன்னமும் இருக்கிறார்

நேரிசை ஆசிரியப்பா

ஏற்பது இகழ்ச்சி ஒளவையும் சொன்னாள்
ஏற்றாரா பெரியார் அண்ணா கேட்டாரா
ஏனன்று கூட்டத்தில் துண்டேந்தி வருவார்
தாரும் தாராள மாயென் றார்பிச்சை
உண்டியைக் குலுக்கி வந்தபோது தருவீர்
பொதுக்கூட் டச்செல வதிகம் என்றாய்
உன்சுய மரியாதை இதுவா மேடைமைக்
ஒலிபெருக்கி இரவுக் இட்லி கோழிசப்பை
ஓட்டல் தங்கல் எல்லாம் பிச்சையில்
ஒசியில் தங்கல் காரின் வாடகை
பேசக்கூலிக் குடும்பம் ஒட்டினாய் அதிலே
இதுவா உன்சுய மரியாதை
இன்னமும் இருக்கிறார் வசூல் செய்தாருமே

...

எழுதியவர் : பழனிராஜன் (5-Dec-20, 7:36 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : innamum irukkiRaar
பார்வை : 550

மேலே