வாழ்க்கை

ஊழி அழிந்தாலும்
ஊழல் அழியா தேசத்தில்
வலிமையான வறுமை மட்டும்
வந்தமரும் எப்போதும்—ஏழைகளின்
வயிற்றிலடித்து உயிரை பறிக்க
வெட்டுப் பழி போல
வாட்டிக் கொல்லும்

படுக்க இடமில்லை
பசி போக்க வழியில்லை
பரிதவித்து நிற்கையிலே
பரிவட்டம் கட்டியவர்களும்
படைத்த பரமனும் கூட
கண்டு கொள்ளாதது
கானகம் புகுந்தார்களோ !

குடும்பங்கள் தெருவில் நிற்க
குடி புகுந்த ஆறுகள் எல்லாம்
கிடைத்ததை எடுத்து செல்ல
இருந்ததும் போனது,
என்ன எடுத்து வந்தோம், எடுத்து செல்ல ?
கானல் நீரைத்தேடி ஓடிய
கவரி மான் போலத்தான் வாழ்க்கை.

எழுதியவர் : கோ. கணபதி. (13-Dec-20, 9:41 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : vaazhkkai
பார்வை : 173

மேலே