ஏ இறையே வேண்டாம் முதுமை

ஏ இறையே வேண்டாம் முதுமை, வாழ்வை முடித்துவிடு
இயந்திரமாய் உழைக்கும் உடல் மட்டுமே போதும்
ஓய்வெடுத்து உதாவாத நிலை பெறும் நிலை வேண்டாம்
பிள்ளைகள் சொந்த நிலை எய்யும் நிலையே நிலை
சுடாராய் எரிந்தப்பின் சாம்பலான திரி தேவையற்றது
அனுபவங்கள் ஆளாளுக்கு மாறும் அரிதியிட முடியாதது
ஆற்றாமையில் உழலும்போது அதிகமான சினம் சூழும்
சினத்தால் பிறர் சிறப்பு வாழ்வு சீர்குலைவு வேண்டாம்
எவ்வுயிரும் இறுதி வரையில் எவற்றையும் சாராமலே
மனிதன் என்ற சிந்திக்கும் மதி பெற்ற விலங்கே சார்ந்து
உணவுக்கே யாரையேனும் ஒட்டி வாழ்வது பெரிய நோயாகும்
பழுத்த பழங்கள் பிறர் பசியைப் போக்கும் நிலையில்
கொழுத்து உழைத்து கொடுத்து பழுத்தப்பின் பாரமாய்
இருந்து இயலாமால் இறுதி வரை வாழ்வது வீணே .
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Dec-20, 11:22 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 53

மேலே