தேவதையைத் தேடி
படபடவென்று வெடிக்கும்
உன் பட்டாசு பேச்சுக்கு முன்
சிறகடிக்கும் பட்டாம்பூச்சிக் கூட
சிலையாய் நிற்குமடி!
நீ பேசும் அழகை கண்டு
ரசித்துச் சிரிக்குமடி!
உன் குரலைக் குத்தகைக்குக் கேட்டு
குதியாய்க் குதிக்குமடி!!
பட்டாம்பூச்சியானது
தேன் தேடி மட்டுமே செல்லாமல்
சில நேரம் உன்போல்
தேவதைகளையும் தேடி சுற்றுமாம்...!
❤️சேக் உதுமான்❤️