சோறு திங்கும் நாட்டிலே

சோறு திங்கும் நாட்டிலே . . .

விவசாயிகளை பற்றி பேசாதே
பாடகரின் மறைவை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
கமலின் அரசியல் பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
அடுத்த முதல்வர் வேட்பாளர் பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
கொரோனாவை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
இட ஒதுக்கீடு பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
வேல் யாத்திரை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
அமைச்சர் வருகையை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
ரஜினியின் அரசியல் பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
புயலை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
செம்பரம்பாக்கம் ஏறியை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
மழையை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
ஊழலை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
நடிகையின் தற்கொலை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
சிறைவாசியின் விடுதலை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
தொலைகாட்சி நிகழ்ச்சியை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
கோமாளி அரசியல்வாதிகளின் பேட்டியை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
அடுத்த தேர்தலின் கூட்டணி பற்றி பேசு

அது சரி
நமக்காக உழைத்து
நாளும் தேய்ந்து சாகும்
விவசாயிகளை பற்றி பேசவும்
விவசாயிகளை நினைத்து வேதனை படவும்
நாம் உண்பது
சோறா என்ன?
நாம் உண்பது தான் வேறாயிற்றே


வலியும் ஆதங்கமும்
ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (18-Dec-20, 6:41 am)
சேர்த்தது : சத்யா
பார்வை : 134

சிறந்த கவிதைகள்

மேலே