நன்றி நவின்றாள் புன்னகைப் பூவிதழால்

தென்றல் தீங்குழல் தழுவி
தந்த முத்த வெகுமதிக்கு
நன்றி நவின்றாள் புன்னகைப் பூவிதழால்
மஞ்சள் வானம் எனக்கும் நன்றி சொல்லாயோ என்ற போது
இன்னும் அவன் வரவில்லை அதுவரை காத்திரு என்றாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Dec-20, 7:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 160

மேலே