காதல்

எனைப்பார்த்த முதல் பார்வையிலேயே
கண்ணால் பேசி மலரா
பவளச்செவ்வாய் இதழால் புன்னகைத்தாள்
என்மனம் வெகுவே மகிழ்ந்தது
இப்படியாய் அவள் ஏறுமுகம் கண்டு
ஆனால் எனோ தெரியவில்லையே
இன்று என்னைப் பார்த்தும்
பார்க்காதது போல பாரா
முகமாய்ப் போகின்றாள் அவள்
இது என்ன அவள் இறங்குமுகமோ
பெண்ணின் மனம் ஒன்றும்
புரியலையே என்செய்வேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Dec-20, 8:50 pm)
Tanglish : kaadhal
பார்வை : 189

மேலே