முகநூல் பதிவு 232

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்
தன்னை புனரமைத்துக் கொள்ள தீவிரமாய் முயற்சிக்கிறது இயற்கை....

எதிர் பாராது வந்த கொரோனாவால்
மொத்த மனித இனமே முடங்கிப்போனது...

பரபரப்பாய் இயங்கும் பள்ளிகள் கல்லூரிகள்
பொதுமக்கள் கூடும் சுற்றுலாத்தளங்கள்
பொழுதுபோக்கு திரையரங்குகள்
அத்தனையும் ஆள் அரவமற்றுப்போக....

மனிதர்களின் ஆக்கிரமிப்பால் ... ஒதுங்க இடமின்றி விலகி மறைந்த உயிரினங்கள் இன்று கண்களுக்கு புலனாகின்றன....

பல நாட்கள் கண்ணில் படாத சிட்டுக் குருவிகள் மற்றும் தேன்சிட்டுக்கள்
எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளன எங்கள் வீட்டு தென்னங்கீற்றில்....

கொட்டி வைத்த மக்கிப்போன காய்கறி தொட்டியில்
ஊட்டமாய் கொழுத்துத் திரிகின்றன நூற்றுக்கணக்கான சிறு சிறு நத்தைகள்....

வீட்டின் முன்புறம் உள்ள
பள்ளியின் வெட்டவெளி மைதானத்தில் மழைநீர் தேங்கி அது ஏரியாய் மாறிப்போக
பகல் முழுதும் எங்கிருந்தோ வந்து இசைபாடும் பற்பல வகை பறவைகள்....
இரவில் தத்தித் தத்தி குதூகலத்தில் குதித்து ஓசையிடும் தவளைகள்.....
எங்கு நோக்கினும் இயற்கையின் மிளிர்ச்சி...

அத்தனையும் காணுகையில்
மனம் உண்மையில் இனம்புரியா இன்பத்தில் துள்ளுகிறது...

தனக்குத்தானே புனரமைத்துக் கொள்ளும் இயற்கையுடன்
நாமும் கொஞ்சம் கைகோர்ப்போமே....
பூமி இழந்த இயற்கை பொலிவை மீட்டெடுக்க
காற்று, நீர், ஒலி,ஒளி மாசுபடமால் தடுப்போமே...
இருக்கும் இடத்திலேயே இயன்ற அளவிற்கு
மரக்கன்றுகள் நடுவோமே......

எழுதியவர் : வை.அமுதா (19-Dec-20, 11:11 pm)
பார்வை : 55

மேலே