பூச்சிகள் பற்றி அறிந்திடுவோம்

பூச்சிகள் பற்றி அறிந்திடுவோம்.... (குழந்தைகளுக்காய்)

அற்பப் பூச்சிகள் என எண்ணிட வேண்டாம்
அதற்கும் பலனுண்டு என்பதை மறந்திட வேண்டாம்

பளபளக்கும் பட்டுப்பூச்சிகள்
பவுசா கட்ட பட்டாடை தருது

மினுமினுக்கும் மின்மினிப் பூச்சிகள்
இரவு முழுதும் அழகாய் ஒளிருது

படபடவென பறக்கும் பட்டாம்பூச்சிகள்
அயல் மகர்ந்த சேர்க்கைக்கு உதவுது

கடகடவென ஓடும் சாண கருவண்டுகள்
கால்நடை கழிவுகளை மறுசுழற்சி செய்யுது

அரியரியாய் அடையும் கரப்பான் பூச்சிகள்
அணுகுண்டு வெடிப்பையும் தாங்க வல்லது

சட்டென கொட்டும் குளவிப் பூச்சிகள்
ஒட்டுண்ணிகளை உண்டு பயிர்கள் காக்குது

அடையில் அடையும் தேனீ பூச்சிகள்
ஆயுளை வளர்க்கும் தேனை கொடுக்குது

விர்ரென பறக்கும் புற்றீசல் பூச்சிகள்
பரத உணவாகி வலிமை கூட்டுது

பல்லாயிரம் பூச்சிகள் பூமியில் உண்டு
பயன்றிந்து வளர்ப்போம் அதன் நன்மைகள் கண்டு

எழுதியவர் : வை.அமுதா (19-Dec-20, 11:13 pm)
பார்வை : 64

மேலே