முழுமதியாகுமோ என் காதல் 555

***முழுமதியாகுமோ என் காதல் 555 ***


நினைவானவளே...


வளர்பிறையும் தேய்பிறையும்
நிலவுக்கு மட்டுமல்ல...



சிலரின்
வாழ்விலும் என்றாய்...


நீ சொன்ன வார்த்தை
உண்மையென இன்று உணர்ந்தேன்...

உன்
மீதான என் காதல்...

வளர்பிறையை போல
வளர்ந்துகொண்டே...


என்
மீதான உன் காதல்...

தேய்பிறையை போல
தினம் தினம்...

நான் முழுவதும்
இல்லாமல் போவதற்குள்...

முழு மதியாய் நீ
என்னுடன் வந்துவிடடி...

கண்களில் தேங்கி
நிற்கும்
கண்
ணீரைக்கூட...

சேமித்து வைக்கிறேன்
தினம் உனக்காக...

நாம் மீண்டும் சந்திக்கும்
அந்த இனிய நாளுக்காக.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (29-Dec-20, 4:52 pm)
பார்வை : 759

மேலே