ஏட்டிக்கு போட்டி
மாறாத உலகில்
மாறுகின்ற காலங்கள்..!!
மாறுகின்ற காலங்களுக்கு
தகுந்தபடி தன்னை மாற்றி
கொள்ளாத மனிதன்..!!
மாற்றம் ஒன்றே மாறாது
என்பதை அறிந்தும்
மாற்றங்களை ஏற்க
மறுக்கும் மனிதன்..!!
இப்படி
ஏட்டிக்கு போட்டியாக
ஒவ்வொரு மனிதனின்
சொல்லும்
செயலும் இருந்தால்
இருட்டில் இருந்து
கொண்டு வெளிச்சத்தை
காண முடியாது...!!
--கோவை சுபா