பெண் வாழ்க்கை

மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்பது கவிமணி கூற்று
அவர் பெண்ணாக பிறந்திருந்தால் மறந்தும் கூறியிருக்க மாட்டார் இக்கூற்றை
பிறந்தவீட்டில் இளவரசியாகவும் தேவதையாகவும் வாழ்பவள்
புகுந்த வீட்டில் அடிமையாகவும் அகதியாகவம் மாற்றப்படுகிறாள்
தந்தையை மன்டியிட வைத்தவள்
தமயனை மன்றாடவிட்டவள்
புகுந்த வீட்டில் மன்டியிட்டும் மன்றாடியும் நிற்கிறாள்
கணவனிடம் கைகூப்பி நிற்கிறாள்
பிறந்த வீட்டின் பெருமை காக்க
ஈன்றோறை பார்பதற்கு கூட
இன்றுவந்தோரின் அனுமதி வேண்டி நிற்கிறாள்
பிறந்த வீட்டை பிரிந்த கணமே
முகமறியாதோரை உறவினராக ஏற்கிறாள்
இனி  வாழும் வாழ்க்கையை
அவளுக்காக அவள் வாழப்போவதில்லை
இந்த நவீன வளர்ச்சி அடைந்த நூற்றுண்டிலும் பல பெண்களின் வாழ்க்கை  இப்படியே கழிந்துவடுகிறதே
இதையெல்லாம் எண்ணுகையில் இந்த இன்னல்களை ஏற்க மாதவம் செய்திருக்க வேண்டும்மா???????

எழுதியவர் : (7-Jan-21, 7:06 pm)
சேர்த்தது : தீபிகா சி
Tanglish : pen vaazhkkai
பார்வை : 74

மேலே