வண்ணம்-122

எழுசீர் வண்ண விருத்தம் : ௧௨௨

தனதான தான தனதான தான
தனதான தான தனதானா

அலையோடு சேலு மினிதாக நாளு
மழகாக ஆடி உறவாடும்
வலைமீது வீழ வெளிதாக வோடி
வளமாக வாழு மதுதானும்
நிலவோடு வானு மிரவோடு கூட
நிறைவாக மூடு முகிலோடே
தொலைதூர மீனி னொளிவீசு மாறு
சுகமாக நீரி லுலவாதோ ?

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Jan-21, 12:11 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 15

மேலே