சந்தக் கலிவிருத்தம்

கண்ணாவென அழைத்தாலவன் கனிவாயுடன் வருவான்
பண்ணால்புகழ் பாடுங்குரல் கேட்டாலவன் மகிழ்வான்
கொண்டாடிடு முளம்பூத்திடக் குழலாலிசை பொழிவான்
விண்தாரகை யொளிவீசிட வெண்முத்தெனச் சிரிப்பான் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Jan-21, 12:24 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 34

மேலே