புவிநிலா

புவிநிலா
👩‍🌾👨🏼‍🌾👩‍🌾👩‍🌾👩‍🌾👩‍🌾👩‍🌾👩‍🌾👩‍🌾👩‍🌾👩‍🌾
அழகுப் பெண்ணே சம்யுக்தா --உன்
அழகை நகல் செய்து எனக்கும் தா !
உன் மேனி செய்த மெழுகிருந்தால் --அதில்
மீந்ததை கொஞ்சம் எனக்கும் தா !

உன் ஆடை கிழிந்திடும் காலத்தில் --அதில்
அறுந்திடும் நூல்களை எனக்கே தா !
உன் தோள்கள் சுமந்திடும் துப்பட்டா -- அதை
தூக்கி பிடித்திடும் வரத்தைத் தா !

உன் உதட்டுச்சாயம் உரிபட்டால் -- என்
உதட்டில் உரசிக்க உரிமை தா !
உன் முகத்தை கழுவிடும் சோப்பிருந்தால் -- அதை
முகர்ந்து பார்க்கனும் அனுமதி தா !

உன்கண்களில் தீட்டிய மையிருந்தால் -- என்
கருவிழியில் தடவிக்க குலுக்கித் தா !
உன் காதுகள் அணிந்துள்ள தங்கத்தை -- நான்
கனவில் ஒருமுறை தொட்டுக்கத் தா !

உன் புருவம் தீட்டிய பேனாவை -- நான்
பொக்கிஷமாக காக்கனும் தா !
என் இமைகளில் வைத்தே மூடிக்க -- உன்
இமைமுடி ஒன்றை இணுங்கித் தா !

உன் தலைமுடி வாரும் சீப்பிருந்தால் -- அதை
தடவிப்பார்த்துக்க ஒரு நொடி தா !
உன் உதட்டின் அசைவை ரசிப்பதற்கு -- நீ
ஒருமுறை என்பெயர் சொல்லித் தா !

நீ கழுத்து நகையை கழட்டி விட்டாய் -- அங்கு
கன்னல்கள் இருக்கும் பார்க்கனும் வா !
உன் கூந்தலை அசைத்திடும் காற்றைத்தான் -- நான்
கொஞ்சம் சுவாசிக்க அருகில் வா !

நீ ஊஞ்சல் ஆடிய மரம்காட்டு -- அதற்கு
உண்மையில் கொடுக்கனும் பாராட்டு...
நீ நடந்திட்ட பாதையை கைநீட்டு -- அதில்
நானும் நடக்கனும் தடம்போட்டு !

நீ இருக்கும் இடத்தின் முகவரியில் -- நான்
இருட்டிலும் வடிப்பேன் கவிவரியை !
க.செல்வராசு
👩‍🌾👩‍🌾👩‍🌾👩‍🌾👩‍🌾👩‍🌾👩‍🌾👩‍🌾👩‍🌾👩‍🌾👩‍🌾

எழுதியவர் : க.செல்வராசு (13-Jan-21, 2:26 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 95

மேலே