சுகமான சுமை

பேசியது விழிகளா/
மின்னல் பளிச்என்றது
அவன் உள்ளத்தில்
நினைத்து பார்க்க முடியவில்லை
அவனால்
ஆனாலும் அவள் அழகிதான்
நெடுநாள் பார்த்தும் அவனுக்குள்
இந்த எண்ணம் தோன்றவில்லை
ஏன் இப்படி/
அவன் எண்ணம் ஏதோ ஒரு வகையில்
ஒரு நிமிடம் ஸ்தம்பித்து சுதாரித்தது .
மீண்டும் அவளை தேடினான்
கல்லூரிக்குள் அவள்
அவனால் அந்த பார்வையில் இருந்து
மீள முடியாது ஏதோ ஒரு தவிப்பு
அன்று மாலை நேரம்
கல்லூரி விடும் நேரம் காத்திருந்தான்
சுகமான சுமை ஓன்று இதயத்தில்
சுமந்தபடி ....

எழுதியவர் : பாத்திமாமலர் (13-Jan-21, 11:15 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : sugamaana sumai
பார்வை : 321

மேலே