பொங்கட்டும் பொங்கல்

ஆடி பட்டத்தில் தேடி
விதைத்த நெல்மணிகளை
கண்மணிகள் போல் வளர்த்து
பருவம் அடைந்தவுடன்...!!

அறுவடை செய்த
புது நெல்லின் புத்தரிசையை
மஞ்சள் கிழங்கு கட்டிய
புது பானையிலிட்டு...!!

பால், நெய், சக்கரை
இவற்றுடன்
முந்திரி, திராட்சை சேர்த்து
சுவையினை கூட்டி...

பொங்கவைத்து
பொங்கி வரும் போது
"பொங்கலோ பொங்கல்" என்று
கூடிய கூட்டம் கூவி மகிழ்ந்து

கதிரவனை வணங்கி
மாட்டுக்கும் பொங்கலை
படைத்தது
மகிழ்ச்சி பொங்கும் நாளே
"பொங்கல் திருநாள்"...!!

இந்த மங்கள திருநாளில்
உங்கள் அனைவருக்கும்

"சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்
அதனால் உழந்தும் உழவே தலை"
என்ற வள்ளுவரின் குறளோடு
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Jan-21, 7:23 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : pongattum pongal
பார்வை : 286

மேலே