அக்டோபர் 30 நண்பனின் பிறந்த நாள்

வாழ்த்து மடல்

வழக்கமாய் பத்து முப்பது நாட்கள் வயிற்றில் தன் பிள்ளையை சுமந்து பெற்றெடுப்பது தாய்மையின் சிறப்பு...!

இது என்ன விசித்திரம் நண்பனே வருடத்தின்
பத்தாவது மாதம் 30-ம் நாள்
உனது பிறப்பு!

நாட்காட்டியும் உன்னை பிள்ளை வரம் கேட்டு பெற்றிருப்பாளோ
மிகத் துல்லியமாய் உன்னை பூமிக்கு அனுப்பி
அழகு பார்க்கிறாள் மாற்றாந் தாயாய்...!

பல நண்பர்களின் பிறந்தநாள் மூளை அது மனனம் செய்ய மறப்பதினால் பதிவு செய்யப்படுகிறது டைரியில்...!

நண்பா உனது பிறந்தநாள்
இனி டைரியில் பதியாமலே நியாபகமிருக்கும்
பத்து முப்பது என
நான் உன்னைப் பாராட்டி
பதிந்து முடிக்கும் வரிகளுக்கு பின்னால்
யாவருக்கும்...!

உன் பிறந்தநாளுக்கு ஒரு வரலாறு நான் கொடுத்தேன் கவி வடிவில்...!

உன் பிறப்பையே நீ வரலாறாக்கு இந்த புவி மடியில்...!

இப்படிக்கு நல்வாழ்த்துக்களுடன் நண்பனாகிய
நான்...!

எழுதியவர் : மன்னை சுரேஷ் (14-Jan-21, 1:25 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 204

மேலே