உழவர் கவிதை

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

ஒவ்வொரு ஆண்டும்
உழவர் தினத்தை
சிறப்பாகக்
கொண்டாடுகிறோம்...
அது சரி
உழவர்களை என்று
கொண்டாடப்போகிறோம்?

🐏🐏🐏🐏🐏🐏🐏🐏🐏🐏🐏

கிராமங்களில் கூட
இப்போதெல்லாம்
கேட்டபதில்லை...
மாட்டுவண்டி சப்தம்...

🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂

பெரும்பாலானர்கள்
உழவர் தினத்தை
கொண்டாடி முடிக்கின்றனர்
தொலைக்காட்சியோடு
மட்டுமே....!

🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄

வீடுகள்தோறும்
"பொஙகலோ!
பொங்கல்" என்ற
வார்த்தையை விட...
"இந்தியத் தொலைக்காட்சியில் முதல் முறையாக" என்ற
வார்த்தையே
அதிகம் ஒலிக்கிறது......!

🐑🐑🐑🐑🐑🐑🐑🐑🐑🐑🐑

உண்ணுவதற்கு
வாயைத் திறக்கும் நாம்...
உழவனுக்கு
ஒன்றென்றபோதும்
வாயை
மூடிக்கொண்டுக்கிறோம்
நாளை
வாயைததான்
திறக்க முடியும்
உண்ணுவதற்கு ஒன்றும் இருக்காது....

🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃

உழவன் வீட்டில்

பொங்கல் பொங்கியது

உடைந்த கழப்பையில்


*கவிதை ரசிகன்*

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

எழுதியவர் : கவிதை ரசிகன் (14-Jan-21, 8:39 pm)
பார்வை : 66

மேலே