கவிஞனின் விவசாயம்

கவிஞனின் விவசாயம்

சொற்கள் எனும்
விதைகளை தேடி
வாக்கியம் என்னும்
பாத்தியில் நட்டு வைத்து
கவிதை என்னும்
விளைச்சலை காண்கிறான்

விளைச்சல் நிறைவை
கொடுப்பதென்பது
விவசாயிக்கென்றால்

கவிஞனுக்கோ

வாக்கியத்தின் நிலத்தில
விளைச்சல்
கண்ட கவிதை

வாசிப்பின்
அனுபவிப்பில்
சுகம் கண்டு
இரசிப்பவர்கள்தான்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (15-Jan-21, 7:33 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 106

மேலே