ஒளிவு மறைவு

திறந்த மனம் கொண்டவன்
என்று சொல்லுபவர்களின்
மனதிலும் மூடிய பகுதி
இருக்கத்தான் செய்யும்..!!

அதுபோல்...
என் வாழ்க்கை
திறந்த புத்தகம் என்று
சொல்லுபவர்களும்
நடுவில் சில பக்கத்தை
மறைத்து வைத்துதான்
படிக்க அனுமதிப்பார்கள்..!!

மொத்தத்தில்...உலகத்தில்
மனிதனின் வாழ்க்கையில்
"ஒளிவு மறைவு"
இருக்கத்தான் செய்கிறது..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Jan-21, 5:09 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : olivu maraivu
பார்வை : 161

மேலே