காதல் கிறுக்கன்

ஏதேதோ மனதில் வந்ததை கிறுக்க
அது என்னையும் அறியாமலே அழகிய
காதல் கவிதையாய் மாறும் மாயம்
யாதோ என்று எண்ண புரிந்தது
புரிந்தது எனக்கு இப்போது அது
அந்த அவள் செய்த மாயம் என்று
அவளை பார்க்க பார்க்க அவள்
அழகை மெல்ல நான் பருகப்பருக
அவள் கவிதையாய் மாறி என்னுள்ளத்தில்
புகுந்தாள் கிறுக்கனின் கிறுக்கல் கூட
காதல் கவிதை யானது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jan-21, 7:42 pm)
Tanglish : kaadhal kirukan
பார்வை : 136

மேலே