காதலன் கதிரவன் காதலி நிலமகள்

காதலன் கதிரவன் காதலி நில மகளை நோக்க
காணும் இடமெல்லாம் காதல் பூக்கள் பூக்க
கதிரவன் தூதுவராய் மேகக்கூட்டங்கள் வாழ்த்த
பூமியின் முகமது புன்செய் செழிப்பில் மகிழ
விசும்பு களிப்பில் குளிர் நீரை பன்னீராய் பொழிய
தளிர்கள் மலர்களின் மணத்தை எங்கும் பரப்ப
முகில்கள் பொழிவில் மயில்கள் மகிழ்ந்து ஆட
மணத்தின் மயக்கம் புவியின் மனத்தை ஈர்க்க
ஈர்ப்பின் ஈர்ப்பால் புவியின் வேகம் பலமாய்கூட
எங்கும் பறவைகள் ஏகாந்தமாய் இன்னிசை பாட
அரவம் புரவி களிரு பசு பல வகை மகிழ்வால் துள்ள
பழச்சோலை வளர்ச்சோலை படுகை யாவும் செழிக்க
தழுவாமல் காதலர் இருவரும் காலத்தை பிறக்கவைக்க
நல்லுலகம் நயமிகு நன்மையை உயிர்களுக்கு ஈனுதே.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (17-Jan-21, 1:05 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 35

மேலே