தேய்ந்தது இளமை

1980 களில் நான் எழுதிய
கவிதைகளில் ஒன்று
உங்களின் வாசிப்புக்கு

ஜன்னல் கம்பிகளின்
நடுவில் முகம்
புதைத்து காத்திருந்தாள்
பெண் ஒருத்தி ...!!

தன்னை கரம் பிடித்து
மணம் முடிக்க ஒருவன்
வருவான் என்று...!!

காலங்கள் கரைந்தது
ஜன்னல் கம்பிகளும்
தேய்ந்தது...!!

இறுதியில் அவளது
இளமையும் தேய்ந்து
முதுமை அடைந்தது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Jan-21, 1:49 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : theinthathu ilamai
பார்வை : 105

மேலே