இருள்

வெளிச்சத்தை மறந்து நான் உன்னிடம் நெருங்கவில்லை
வெளிச்சம் இருந்தும் உன்னை உணர்கிறேன்
விழிமூடா விந்தை ஆகிறேன், உன் அணைப்பில் பிள்ளை ஆகிறேன்
ஆயிரம் உறவுகள் சுற்றி இருந்தும் உன்னை மனம் தேடியது
சப்தங்கள் சங்கமித்தபோதிலும் அமைதியாய் உன்னில் கலந்திட்டேன்
ஆறுதல் சொல்ல அருகில் ஒருவரை நான் தேட
என்றும் நானே உன் ஆறுதல் என நீ சொன்னாய்
போலிகள் எல்லாம் உன்னில் காணாமல் போக
என்னை பொய்கள் இன்றி அனைத்துக்கொண்டாய்
உன் அரவணைப்பில் அமைதி கொண்டேன், தனிமை என்னும் தாலாட்டு பாடினாய்
தனிமையும் சுகம் என நான் உணர, என்னிடம் நீ புன்னகை பூத்தாய்
உன்னில் மறந்து போன என் சோகம், யாரும் இல்லா தனி இரவில்
உன்னை ஸ்பரிசிக்கும் காதலாக நான், என்றும் என் தனிமையின் இனிமையாய்
நீயே என் இருள்..........

எழுதியவர் : ஹேமாவதி (18-Jan-21, 12:51 pm)
சேர்த்தது : hemavathi
Tanglish : irul
பார்வை : 109

மேலே