எரிக்கும் நினைவுகள்

என் தெய்வமாய் தெரிந்தாய்..
என் வாழ்க்கையை
எனக்கு மீட்டு
எனக்கு மறு ஜென்மம்
அளித்த தருணத்தில் ...

என் தாயாய் தெரிகிறாய்..
உன் மடி மீது
நான் தூங்க
நினைக்கும் தருணங்களில்..

என் தந்தையாய் தெரிகிறாய்..
நான் தவறு
செய்வதை சுட்டி
காட்டி என்னை
திருத்தும் தருணங்களில்..

என் ஆசானாய் தெரிகிறாய்..
எனக்குள் ஒளிந்திருக்கும்
திறமையை எனக்கே
தெரியாமல் நீ
வெளி கொண்டு
வரும் தருணங்களில்..

என் குழந்தையாய் தெரிகிறாய்..
என் அன்பை நீ
புரிந்து கொள்ள
முடியாத தருணங்களில்..

என் தோழனாய் தெரிகிறாய்
உன் தோள் சாய்ந்து
என் கவலைகளை நான்
மறக்க நினைக்கும் தருணங்களில்...

என் காதலனாய் தெரிகிறாய்..
உன்னிடம் நான் கொஞ்சி
பேசி விளையாட
துடிக்கும் தருணங்களில்..
...
இருந்தும்...
...
...
என் எதிரியாய் தெரிகிறாய்..
உன் இதயத்தை
நான் தொட
முயற்சிக்கும் போது
மட்டும்...

எழுதியவர் : சூர்யநிலவன்  (18-Jan-21, 7:14 pm)
சேர்த்தது : SooryaNilavan
Tanglish : erikkum ninaivukal
பார்வை : 400

மேலே