நதிகளின் தூய்மைக் காப்போம்

தூய யமுனை நீரை அன்று கொடிய
அரவம் காளிங்கன் விடம் கக்க
கருநீலமாய்ப் பாய்ந்து மனிதருக்கு
தீங்கு விளைவிக்க கண்ணன் காளிங்க
நடனம் ஆடி அரவத்தின் ஆணவம்
அளித்தான் மீண்டும் ஆண்டாள் திருப்பாவையில்
போற்றும் வண்ணம் தூய்மையாய் ஓடிய
யமுனை இன்று மீண்டும் கருநீல
நதியாய் ஓடுவதேன் பொறுப்பில்லா மனிதர்
அன்னை நதியில் கழிவுரசாயனம் சேர்ப்பதினாலே

நதிகளைக் காப்போம் நதிகளின் தூய்மையை
அன்னையைப் போல் நதிகளைக் காப்போம்
இயற்கை அவள் நம்மை வாழவைப்பாள்
வாழ்வாங்கு அறிவோம் நாம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Jan-21, 10:39 am)
பார்வை : 47

மேலே