மோடி மஸ்தான்

மோடி மஸ்தான் நடத்திய
வித்தை ஒன்றை வீதியில்
வேடிக்கை பார்த்துக் கொண்டு
நின்றிருந்தேன் ..!!

நீயும் அந்த கூட்டத்தில்
நின்று கொண்டு இருந்தாய்

அப்போது...
உன் கண்கள் என்னை பார்த்து
டேய் பையா...
இங்கே வாவென்று
மோடி மஸ்தான்
அழைப்பது போல்
என்னை அழைத்தது ...!!

நானும் மகுடிக்கு
கட்டுப்பட்டு
மயங்கி இருக்கும்
பாம்பினை போல்
உன்னருகே
மயங்கியபடி வந்தேன்..!!

என் இதயத்தை
உனக்கு தா என்றாய்
மறு பேச்சு பேசாமல்
தந்து விட்டேன் ..!!

என் இனியவளே
எனக்கு ஒரு சந்தேகம்
நீயும் மோடி மஸ்தான்
வித்தை தெரிந்தவளோ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Jan-21, 11:47 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 111

மேலே