பெண் குழந்தை தினம் இன்று

பெண், உலகில் , படைப்பில் மிக உயர்ந்தவள்
ஒரு பெண்ணால்தான் ஒரு ஆணையும் படைக்க முடியும்
தன்னைப்போல் ஒரு பெண்ணையும் கூட
ஒரு பெண்ணால்தான் தாய்மை அடைய முடியும்
தாயாக அன்பின் உறைவிடமாக என்றும்
பெண் குழந்தையை 'பாலாம்பிகையாய்' எண்ணி
அவள் பருவ மங்கையாய் காட்சிதர
அதில் கன்யா குமாரியைக் காண்போம்
அவள் தாயாய்க் கண்முன் நிற்க
சக்தி தெய்வமாய், காமாட்சியாய்ப் போற்றுவோம்
பெண்ணில் சக்தி ரூபம் காண்போம்
மாட்சியுடன் உலகில் வாழ்வாங்கு வாழ்வோம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jan-21, 2:16 pm)
பார்வை : 37

மேலே