முத்துக்களும் சிரிக்கட்டும்

சிப்பியில் பிறந்த முத்துக்களுக்கு
உன் சிரிப்பினில் என்னடி வேலை
முத்துக்கள் கோர்த்த மாலையை
கழுத்தினில் அணியக் கொடுத்தால்
புன்னகை இதழிடையே வைத்து
போட்டிக்கு அழைக்கிறாயா முத்துக்களை ?
போட்டியில் தோற்று முத்துக்கள் மனமுடைந்து
மீண்டும் கடல் ஆழத்திற்கே போய்விட நினைக்காதோ
சிரித்தது போதும் வாயை மூடடி கொஞ்சம்
முத்துக்களும் சிரிக்கட்டும் !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jan-21, 10:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 109

மேலே