காமம் மிகின்

காமம் மிகின் மானம், குலம், கல்வி,
வண்மை, அறிவுடைமை நீங்கியே
கீழான செய்கையில் மனமிறங்கும்

பொறுமை. தாய்மை, நட்பு, குற்றமின்மை
பெருமை, சேய்மை, அருமை, உடைமை
நீங்கியே காமக்குறிக்கோளே நிலைக்கொள்ளும்

குருதி, எலும்பு, வீரியம், வீரம்
தசை, உணர்ச்சி, சூடு, சொரணை
கெட்டே காழ்ப்புணர்ச்சி மிகுந்தெழும்

உழைப்பு, பிழைப்பு, தழைப்பு, விழைவு
உயர்வு, நல்லறிவு, நயம், தவம்
குறைந்து ஒவ்வா நிலையில் உயிர் இருக்குமே
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-Jan-21, 2:36 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 102

மேலே